எரிமலையா இருந்தாலும் அவிங்க ஊர் நடுவில்தான் வெடிக்கும் ,,சுனாமியா இருந்தாலும் அவிங்க ஊரைதான் அள்ளி சுருட்டிக்கிட்டு போகும் ,,வைரஸ் தாக்கினாலும் அவிங்க ஊரைதான் தாக்கும் ,,
அட இதெல்லாம் எப்போ நடந்துச்சின்னு கேக்குறிங்களா?? இதெல்லாம் காலம் காலமாக நம்ம ஹாலிவுட் சினிமால தாங்க நடந்துட்டு வருது ,,அதே போல் இந்த முறையும் உலகை நோக்கி வருது ஒரு பெரிய ஆபத்து ,,நல்லதோ கேட்டதோ எது வந்தாலும் அது நம்ம அமெரிக்க காரங்களுக்கு தானே வரணும் அது தானே உலக நியதி ,,,அந்த நியதிக்கு சற்றும் மாற்றம் இல்லாமல் நியூ யார்க் நகரை தாக்குகிறது அந்த ஆபத்து ,,,மக்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு இந்த மனித குலத்தை காப்பாத்த எந்த அப்பாடக்கரும் இல்லையான்னு மக்கள் எல்லோரும் குரல் கொடுக்கும் போதுதான் வந்து இறங்குறாங்க நம்ம சூப்பர் ஹீரோக்கள்(??????) சூப்பர் ஹீரோன்னா தனிய தானே உலகத்தை காப்பாத்த வரணும் அது என்ன சூப்பர் ஹீரோக்கள் ????
தி அவேன்ஜெர்ஸ் (The Avengers-2012)
உலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கு ஒன்று சேர்கிறார்கள் நம்ம அபிமான ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் ,,,***இரும்பு மனிதன் -அயன் மேன்-Iron man
***பச்சை மனிதன் -தி ஹல்க் - The Hulk ,,
***இடிகளின் அதிபதி-தி தோர்- The Thor ,,
***அட்டகாசமான அமெரிக்க வீரன் -கேப்டன் அமேரிக்கா- Captain America
இன்னும் பல அதிரடி சூப்பர் ஹீரோக்களுடன் உலகை காப்பாற்ற களம் இறங்குகிறது இந்த அதிரடி அணி ,,
ஒரு சூப்பர் ஹீரோன்னால்லே ஊரே கதி கலங்கும் இதுல இத்தனை பேரா??? இந்த பக்கா ஆக்க்ஷன் அதிரடி திரைப்படம் வரும் மே மாதமளவில் திரைக்கு வரவிருக்கிறது ,,,
இப்போதைக்கு இந்த படத்தின் ட்ரைலரை கண்டு களிப்போம் ,,,
படக்குழுவினர் விபரம்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||

