Tuesday, December 6, 2011

கொஞ்சம் சிரிங்க பாஸ்.....................

நெட்டில் உலாவிய போது என் கண்ணில் சிக்கிய சில கடிகள்............முடிஞ்சா சிரிங்க .......அல்லது இந்த பதிவு முடிஞ்சப்புரமாவது கொஞ்சம் சிரிங்க....ஹி,,,ஹி,,,ஹி









  • நாய்க்கு  நாலு  கால்  இருக்கலாம் . ஆனா  அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,
even MISSED கால்  கூட  பண்ண  முடியாது !


  • கங்கை  ஆத்துல  மீன்  பிடிக்கலாம் .... காவேரி  ஆத்துல  மீன்  பிடிக்கலாம்  .. ஆனா 
ஐயர்  ஆத்துல  மீன்  பிடிக்க  முடியுமா? 

  • என்னதான்  ஒருத்தன்  குண்டா  இருந்தாலும், அவன  துப்பாக்கிகுள்ள போட முடியாது. 

  • பொங்கலுக்கு  கவர்மெண்ட்ல  லீவு  குடுபாங்க... ஆனா இட்லி  தோசைக்கு  குடுப்பாங்களா?! 

  • தூக்க  மருந்து  சாப்பிட்டா தூக்கம்  வரும்... ஆனா ...இருமல்  மருந்து  சாப்பிட்டா 
இருமல்  வராது! 

  • சண்டே  அன்னிக்கு  சண்டை  போட  முடியும், ஆனா  மண்டே  அன்னிக்கு  மண்டைய  போட்டால்  விபரிதமா ஆயிடும் !!! 

  • 'Hand wash'ன்ன  கை  கழுவறது , 'Face wash'ன்ன  முகம்  கழுவறது  , அப்போ 
'brain wash' ன்ன  பிரைன கழுவறதா? 

  • "விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

  • "ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"

  • "சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."

  •  தலைவர் வீட்டு காலிங் பெல்லை கவனிச்சியா? என்னவாம்? 
அமுக்கினால்  தலைவர் வாழ்க - ன்னு  சத்தம் போடுது!!

  • நாட்டாமை  : என்றா  பசுபதி?
         பசுபதி  : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
          நாட்டாமை  : என்றா ???
          பசுபதி  : அதான்  என்ரோம்ல … 



2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..



விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.

கணவன்: எனக்கு டைவர்ஸ் வேணும். என் மனைவி ஆறு மாசமா என்னிடம் பேசவில்லை.
வழக்கறிஞர்: திரும்ப திரும்ப நல்லா சிந்துச்சுக்கங்க. அப்படி பட்ட  மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.


இந்த கடிகள் அனைத்துமே சுடப்பட்டவை.........இதன் சொந்தக்காரர்கள் என்னை மன்னிச்சூ,,,,,

Thursday, December 1, 2011

பசி வந்தால்............

பசி வந்தால் பத்தும் பறக்கும்னு சொல்லுவாங்க............இந்த பசி தாங்க என்னைய பொறுத்தவர இந்த உலகமே இயங்குரதுக்கு காரணம்.நீங்க என்றைக்காவது பசி வந்தும் சாப்பிட ஒன்றும் இல்லாம இருந்திருக்கிங்களா???பசிக்கும், ஆனா எதயாவது வாங்கி சாப்பிட பாக்கெட்டில் அஞ்சு பைசா இருக்காது.இந்த அனுபவம் பெரும்பாலும் ஊர் விட்டு,ஊர் வந்து தொழில் செய்யும் திருமணமாகாத இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.சில சமயங்களில் மாச கடைசியாகும் போது இந்த மாதிரி சம்பவங்கள் என் வாழ்கையிலும் ஏற்பட்டிருக்குது.ஆனால்,கைல சம்பள கவர் கிடைத்தவுடன் சேர்த்து வைத்து ஒரு கட்டு கட்டி விடுவோம் ........


ஆனால் நாம் வாழும் இதே ஊரில் எத்தனையோ பேர் சாப்பிட உணவில்லாமல் இருப்பதை பற்றி என்றைக்காவது யோசித்து பார்த்து இருப்போமா.நாம் ஒவ்வொரு வேளையும் ஒக்காந்து ,ஒய்யாரமாக சாப்பிடும் போதும் இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூளையில் ஒரு உயிர் உணவுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.உலகில் எந்த ஒரு மனிதனும் சாப்பிடாமல் வீனடிக்கப்படும் உணவு மட்டும் வருடத்திற்கு 8.6 மில்லியன் டன்கள்.இந்த பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட உலகில் ஏதோ ஒரு இடத்தில் பட்டினியால் ஒரு உயிர் போயிருக்கக் கூடும்.ஒவ்வொரு 3.5 செக்கனுக்கும் ஒரு மரணம் பட்டினியால் நிகழ்கிறது.

இந்த வீடியோ ஒவ்வொரு மனிதரும் பார்க்க வேண்டிய ஒன்று .....


இந்த குறும்படம் 2006 ஆம் ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.3600 குறும்படங்களில் தெரிவு செய்யப்பட்ட 32 குறும்படங்களே இறுதி சுற்றுக்காக திரையிடப்பட்டது.இந்த குறும்படம் மற்ற எல்லாவற்றையும் விட நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டும் அல்லாமல் முதல் இடத்தையும் தட்டிச்சென்றது.

---------இந்த குறும்படத்தின் கதை---------
  KFC போன்ற ஒரு உணவகத்தில் இரு பெண்கள் உணவு அருந்துகிறார்கள்,திடீர் என்று சினுங்கும் செல்போனை எடுத்து கதைக்கும் பெண் மற்ற தோழியவும் அழைத்துக்கொண்டு வெளியேருகிரார்.அவர்கள் பாதியில் விட்டுச்சென்ற உணவை வேறு ஒரு மனிதர் பைகளில் இட்டு இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிரார்,அது என்ன இடம் அங்குள்ளவர்கள் அந்த உணவை என்ன செய்கிறார்கள் என்பதை திரையில் காணும் போதுதான் சுவாரசியம்,ஆகவே அதை திரையிலேயே காண்போம்....






 "பசி" உலகமே சுழலும் அச்சாணி,,,,மொழி,இனம்,மதம்,நிறம் கடந்து எல்லோருக்கும் புரிந்த,தெரிந்த ஒரே மொழி,,,,,,,,,"உணவு" ஏழையின் கனவு,,,,பணக்காரர்களின் பொழுதுபோக்கு,,,,,,,,,THINK A MINUTE.....BEFORE YOU GOING TO THROW IT,,,,,,,,,,,,,,,,,
பசியாற உண்டு மகிழ்வோம் ,,,,,உணவு வீனடிக்கப்படுவதை தடுப்போம்.....