- நாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,
even MISSED கால் கூட பண்ண முடியாது !
- கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா
ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
- என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது.
- பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுபாங்க... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?!
- தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்... ஆனா ...இருமல் மருந்து சாப்பிட்டா
இருமல் வராது!
- சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும், ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட்டால் விபரிதமா ஆயிடும் !!!
- 'Hand wash'ன்ன கை கழுவறது , 'Face wash'ன்ன முகம் கழுவறது , அப்போ
'brain wash' ன்ன பிரைன கழுவறதா?
- "விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"
- "ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"
- "சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."
- தலைவர் வீட்டு காலிங் பெல்லை கவனிச்சியா? என்னவாம்?
அமுக்கினால் தலைவர் வாழ்க - ன்னு சத்தம் போடுது!!
- நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
நாட்டாமை : என்றா ???
பசுபதி : அதான் என்ரோம்ல …
நாட்டாமை : என்றா ???
பசுபதி : அதான் என்ரோம்ல …
2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..
விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.
கணவன்: எனக்கு டைவர்ஸ் வேணும். என் மனைவி ஆறு மாசமா என்னிடம் பேசவில்லை.
வழக்கறிஞர்: திரும்ப திரும்ப நல்லா சிந்துச்சுக்கங்க. அப்படி பட்ட மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.
இந்த கடிகள் அனைத்துமே சுடப்பட்டவை.........இதன் சொந்தக்காரர்கள் என்னை மன்னிச்சூ,,,,,



No comments:
Post a Comment