பசி வந்தால் பத்தும் பறக்கும்னு சொல்லுவாங்க............இந்த பசி தாங்க என்னைய பொறுத்தவர இந்த உலகமே இயங்குரதுக்கு காரணம்.நீங்க என்றைக்காவது பசி வந்தும் சாப்பிட ஒன்றும் இல்லாம இருந்திருக்கிங்களா???பசிக்கும், ஆனா எதயாவது வாங்கி சாப்பிட பாக்கெட்டில் அஞ்சு பைசா இருக்காது.இந்த அனுபவம் பெரும்பாலும் ஊர் விட்டு,ஊர் வந்து தொழில் செய்யும் திருமணமாகாத இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.சில சமயங்களில் மாச கடைசியாகும் போது இந்த மாதிரி சம்பவங்கள் என் வாழ்கையிலும் ஏற்பட்டிருக்குது.ஆனால்,கைல சம்பள கவர் கிடைத்தவுடன் சேர்த்து வைத்து ஒரு கட்டு கட்டி விடுவோம் ........
ஆனால் நாம் வாழும் இதே ஊரில் எத்தனையோ பேர் சாப்பிட உணவில்லாமல் இருப்பதை பற்றி என்றைக்காவது யோசித்து பார்த்து இருப்போமா.நாம் ஒவ்வொரு வேளையும் ஒக்காந்து ,ஒய்யாரமாக சாப்பிடும் போதும் இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூளையில் ஒரு உயிர் உணவுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.உலகில் எந்த ஒரு மனிதனும் சாப்பிடாமல் வீனடிக்கப்படும் உணவு மட்டும் வருடத்திற்கு 8.6 மில்லியன் டன்கள்.இந்த பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட உலகில் ஏதோ ஒரு இடத்தில் பட்டினியால் ஒரு உயிர் போயிருக்கக் கூடும்.ஒவ்வொரு 3.5 செக்கனுக்கும் ஒரு மரணம் பட்டினியால் நிகழ்கிறது.இந்த வீடியோ ஒவ்வொரு மனிதரும் பார்க்க வேண்டிய ஒன்று .....
இந்த குறும்படம் 2006 ஆம் ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.3600 குறும்படங்களில் தெரிவு செய்யப்பட்ட 32 குறும்படங்களே இறுதி சுற்றுக்காக திரையிடப்பட்டது.இந்த குறும்படம் மற்ற எல்லாவற்றையும் விட நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டும் அல்லாமல் முதல் இடத்தையும் தட்டிச்சென்றது.
---------இந்த குறும்படத்தின் கதை---------
KFC போன்ற ஒரு உணவகத்தில் இரு பெண்கள் உணவு அருந்துகிறார்கள்,திடீர் என்று சினுங்கும் செல்போனை எடுத்து கதைக்கும் பெண் மற்ற தோழியவும் அழைத்துக்கொண்டு வெளியேருகிரார்.அவர்கள் பாதியில் விட்டுச்சென்ற உணவை வேறு ஒரு மனிதர் பைகளில் இட்டு இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிரார்,அது என்ன இடம் அங்குள்ளவர்கள் அந்த உணவை என்ன செய்கிறார்கள் என்பதை திரையில் காணும் போதுதான் சுவாரசியம்,ஆகவே அதை திரையிலேயே காண்போம்....
"பசி" உலகமே சுழலும் அச்சாணி,,,,மொழி,இனம்,மதம்,நிறம
பசியாற உண்டு மகிழ்வோம் ,,,,,உணவு வீனடிக்கப்படுவதை தடுப்போம்.....


No comments:
Post a Comment